சுவிட்சர்லாந்தில் தன்னுடைய மனைவியை பல வருடங்களாக துன்புறுத்தி வந்த கணவருக்கு நீதிமன்றம் அதிரடியான தண்டனை ஒன்றை விதித்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன்னுடைய மனைவியை நிச்சயதார்த்தம் முடிந்ததிலிருந்தே பலவித கட்டுப்பாடுகளை விதித்ததோடு மட்டுமின்றி அவரின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் தொடங்கியுள்ளார்.
இதனையடுத்து திருமணத்திற்குப் பின்பு அந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் தன்னுடைய மனைவியை மிகவும் கொடூரமாக உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கொடுமை செய்துள்ளார். இதனால் அவருடைய மனைவி தனது கொடூர கணவரிடமிருந்து பிரிந்து செல்வதற்கு திட்டமிட்டுள்ளார்.
ஆனால் மறுபடியும் அந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் தன்னுடைய மனைவியை விடாது தொடர்ந்து தொல்லை கொடுத்தும், கொடுமை செய்தும் வந்துள்ளார். இந்நிலையில் நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கிற்கு நீதிபதிகள் அதிரடியான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார்கள்.
அதாவது மனைவியை கொடூரமாக கொடுமை செய்த அந்த 30 வயது மதிக்கத்தக்க நபருக்கு அபராதமும், 1 ஆண்டுகாலம் சிறை தண்டனையையும் நீதிமன்றம் விதித்துள்ளது. அதன் பின்பும் அவர் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் சுமார் 8 ஆண்டுகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.