தென் பசுபிக் பிராந்திய நாட்டில் உள்ள வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
தென் பசுபிக் பிராந்திய நாடுகளில் ஒன்றான வனுவாட்டு தீவு ஆசிய கடற்கரையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இத்தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமானது பூமியின் ஆழத்தில் இருந்து 528 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.
இதனை அமெரிக்க நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த நிலடுக்கமானது மிக ஆழத்தில் ஏற்பட்டதாக இருந்தாலும் சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனை அடுத்து இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை..