சோமாலியாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் தீவிரவாதிகள் 5 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சோமாலியா நாட்டில் அல் ஷபாப் தீவிரவாதிகள் வீதியோரம் வெடிகுண்டுகளை வைத்து அடிக்கடி வன்முறை சம்பவங்களை நடத்தி வருகின்றனர். இதனால் அந்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் சோமாலியா நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது.
அதில் ஒரு பகுதியாக சோமாலியா நாட்டின் தேசிய ராணுவ படையினர் அதிரடி வேட்டையில் இறங்கி அல் ஷபாப் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து வேட்டை நடந்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இதனை ராணுவ ஒத்துழைப்பு மற்றும் ஊடக பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.