தமிழகத்தில் அடுத்தடுத்து தீவிரவாதிகள் சிக்கும் நிலையில் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது, உட்பட மூன்று வழக்குகளை விசாரிக்க தேசிய புழனாய்வு முகமை திட்டமிட்டு உள்ளது. இதுதொடர்பாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும், என்று தகவல் வெளியாகியுள்ளது. களியக்காவிளை சோதனை சாவடில் சிறப்பு SI வில்சன் கடந்த 8 ம் தேதி அன்று தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்ச்சியாக தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களிலும் சிறப்பு படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சுமார் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்ய பட்டிருக்கிறார்கள். குறிப்பாக இந்த கொலையில் ஈடுபட்ட 2 தீவிரவாதிகளை தற்போது கன்னியாகுமரி மாவட்ட போலீசார் விசாரணையில் வைத்து, விசாரித்து வரக்கூடிய சூழலில், இதுவரை தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் 10 பேரை கைது செய்திருக்கிறார்கள்.
குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் புதிதாக ஒரு அமைப்பு போல தொடங்கி இவர்கள் செயல்பட்டு வந்தது தெரிய வந்திருக்கின்றது. குறிப்பாக இந்த அமைப்புக்கு ஆள் சேர்த்தது என்று டெல்லியில் வைத்து காஜாமுகைதீன் கைது செய்யபட்டார். அந்த காஜாமுகைதீன்காக ஒரு பொறியியல் பட்டதாரி தனியாக ஒரு சாப்ட்வேர் தயாரித்துக் கொடுத்து இருக்கிறார். அந்த சாப்ட்வேர் மூலமாக வெளிநாடுகளிலிருந்து உத்தரவுகளை பெற்று அவர்கள் இங்கு நடைமுறைப் படுத்துவதற்காக அவர்கள் தயாரித்து வந்தது தெரிய வந்திருக்கின்றது.
இதுவரை டெல்லியில் ஒரு மூன்று பேரும், தமிழக கியூ பிராஞ்ச்யிடம் ஒரு பத்து பேர், அதேபோல கன்னியாகுமரியில் இரண்டு பேர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பலர் விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்கள். குறிப்பாக இந்த விவகாரத்தில் தீவிரவாதிகளுக்கு சிம் கார்டு சப்ளை செய்ததாக, காஞ்சிபுரத்தில் 6 பேரை கியூ பிராஞ் போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். பச்சையப்பன், ராஜேஷ், அன்பரசன், அப்துல் ரஹ்மான் என்று உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே சிம் கார்டு சப்பளை செய்ததாக, பெங்களூரில் 3 பேரையும் போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.
இவர்கள் கொடுத்த தகவலின்படி தீவிரவாதிகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட சிம்களை, இவர்கள் போலி ஆவணங்கள் மூலமாக வாங்கிக் கொடுத்து இருப்பதாக தெரிகின்றது. இந்த விசாரணை வளையம் மேலும் விரிவடைய வாய்ப்பிருப்பதால், ஏற்கனவே பல வழக்குகளை விசாரித்து வரக்கூடிய தீவிரவாத அமைப்புகள் தொடர்பான வழக்கை விசாரித்து வரக்கூடிய எண்ணை, ஏன் இந்த வழக்கை கையில் எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதற்கான மனுக்கள் இன்று அந்ததந்த நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படலாம், என தெரிகிறது.
குறிப்பாக பூந்தமல்லியில் இருக்க கூடிய சிறப்பு நீதிமன்றத்தில் இதற்கான மனுவை, அதிகாரிகளிடம் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. முதலில் இந்த சிம் கார்டு வழங்கியவர்கள் எண்ணை இயக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. எப்படி சிம்கார்டுகள் இவர்கள் பெற்றார்கள், யார் யாருக்கெல்லாம் கொடுத்தார்கள், எப்படி இது ஒரு நெட் ஒர்க்காக அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்றது , அதே போல இதற்கு பின்னால் யாரெல்லாம் இருக்கிறார்கள், என்ற ஒரு விசாரணையை முதலில் அதிகாரிகள் செயல்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இந்த சிம் கார்டு வழக்கை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஒப்படைக்க கோரி மனு தாக்கல் செய்யப்படலாம், என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் களியக்காவிளையில் SI வில்சன் கொலை வழக்கில் சம்பந்தப்பட கூடிய அந்த தீவிரவாதிகளை ஏற்கனவே சென்னையில் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் சம்பந்தப் பட்டிருப்பதால் அந்த வழக்கும் அவர்கள் எடுப்பதற்காக விசாரணை, இன்றைய தினம் மனு தாக்கல் செய்யப்படலாம், என எதிர்பார்க்கபடுகிறது.
அதை வேளையில் டெல்லியில் இருக்கக்கூடிய கைது செய்யப்பட்டிருக்கும் மூவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவதற்காக, அதிகாரிகள் இதனைச் மனுக்கள் தாக்கல் செய்யலாம், என்று எதிர்பார்க்கபடுகிறது. முழுவதுமாக இந்த கொலை அதை தொடர்ந்து வரக்கூடிய தேடுதல் வேட்டைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர் தொடர்ச்சியாக இந்த அனைத்து வழக்குகளையும் விரைவிலேயே, வழக்குகளை கையிலெடுத்து தங்களுடைய அடுத்த கட்ட விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.