ஸ்டவ் அடுப்பு வெடித்ததால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் பகுதியில் தேவி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தேவி தனது வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது ஸ்டவ் அடுப்பு திடீரென வெடித்து தேவியின் மீது தீப்பிடித்து எரிந்தது.
இதனால் தேவியின் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தேவியை அவரது குடும்பத்தினர் உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தேவி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.