Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சமையல் செய்து கொண்டிருந்த 6 பேர்…. தீயில் கருகிய வாயில்லா ஜீவன்கள்…. போலீஸ் விசாரணை….!!

தீயில் கருகி 17 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் பகுதியில் வைகுண்டம், சீவலப்பேரி பகுதியில் வசிக்கும் வெங்கடாசலம், பெரியதுரை, பழனிவேல், கசமுத்து, சங்கரன் ஆகிய 6 பேரும் சுமார் 600 க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் 6 பேரும் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில் 6 பேரும் அருகில் உள்ள பாறைக்குட்டத்தில் தங்களது ஆடுகளை ஒரு தோட்டத்தில் கிடை போட்டிருந்தனர். இதனையடுத்து 6 பேரும் இரவு சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது எழுந்த தீப்பொறி ஆடுகளின் மீது பட்டது. இதில் 17 ஆடுகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களும் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மணியாச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |