டாக்டர் வீட்டில் நகை பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேடு பகுதியில் ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டாக்டர் ஆவார். இவர் நேற்று முன்தினம் தனது கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு தனியார் ஸ்கேன் மையத்திற்கு சென்றுவிட்டு அங்கிருந்து தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் அவர் மறுநாள் காலை தனது வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் நகை மற்றும் ரூபாய் 2 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ரங்கநாதன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களுடன் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டு கைரேகை போன்ற தடயங்களை சேகரித்து விசாரணை நடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டாக்டர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.