ராணுவ வீரர்கள் வீட்டில் நகை பணம் உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கபாலீஸ்வரன், பிரகதீஸ்வரன். இவர்கள் இருவரும் அசாம் மாநிலத்தில் இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது விடுமுறை என்பதால் இவர்கள் சொந்த ஊரான குண்டூருக்கு வந்துள்ளனர். அங்கு அவர்களுடைய வீடு உள்ள பகுதியில் கடந்த ஒரு வாரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பக்கத்து தெருவில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்று இரவில் தங்கியுள்ளனர்.
பின்னர் மறுநாள் காலை வழக்கம் போல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது கபோர்டில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் நகை மற்றும் 90 ஆயிரம் பணம் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருடு போன தங்க நகைகளின் மதிப்பு சுமார் 13 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.