பெண்களிடம் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர், நாகமலை, வாடிப்பட்டி போன்ற பகுதிகளில் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின் பேரில் தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் வாடிப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.இந்த விசாரணையில் அவர்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பதிலளித்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் கார்த்திக் ராஜா, ரமேஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அப்பகுதிகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 23 பவுன் நகை மற்றும் மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.