கடையின் கதவை உடைத்து பணம், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள தத்தனேரி பகுதியில் வசித்து வருபவர் முத்துப்பாண்டி. இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார். தற்சமயம் கொரோனா ஊரடங்கினால் இவர் தனது கடையை பூட்டி வைத்துள்ளார். இந்த நிலையில் அவரது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் முத்துப்பாண்டிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில் முத்துப்பாண்டி கடையை நேரில் சென்று பார்த்தபோது கடைக்குள் இருந்த பலசரக்கு பொருட்கள் மற்றும் பணம் ஆகியவை திருடு போனது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.