Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பக்கத்துலதான் போயிருந்தேன்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் சிக்கிய 2 பேர்….!!

9 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்டுவெல் காலனி பகுதியில் சந்தானகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வெளியே சென்ற சந்தானகிருஷ்ணன் திரும்பி வந்து பார்த்தபோது தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றதை அறிந்து உடனே தென்பாகம் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மேல சண்முகபுரம் பகுதியில் வசிக்கும் சதீஷ் மற்றும் புதிய சமயபுரம் பகுதியில் வசிக்கும் டேனியல் ராஜ் என்ற இரண்டு வாலிபர்களும் சந்தானகிருஷ்ணனின் வீட்டில் திருடியது தெரியவந்துள்ளது. அதன்பின் இரண்டு வாலிபர்களையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 9 பவுன் தங்க நகை இரண்டு லட்ச ரூபாய் பணம் போன்றவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |