Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நடந்த சம்பவம்…. கைரேகை நிபுணர்களுடன் ஆய்வு…. போலீஸ் வலைவீச்சு….!!

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 8 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 10 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலவஞ்சிபாளையம் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரான யுவராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிவராஜ் வெளியே சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 லட்ச ரூபாய் பணம் மற்றும் 10 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றதை அறிந்து உடனடியாக வீரபாண்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |