வீட்டின் கதவை உடைத்து தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். தற்போது அந்தோணியின் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் அந்தோணியின் வீட்டு கதவை உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.