கோவை மாவட்டம் சூலூர் அருகே வீட்டில் திருட முயன்ற திருடனை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியை அடுத்த காக்காபாளையம் பகுதியில் தனது வீட்டில் ஜன்னல் கதவு மர்ம நபர்களால் திறக்கப்பட்டுவதை மாணிக்கம் என்பவர் பார்த்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த சிலரை உதவிக்கு அழைத்து தப்பி ஓட முயன்ற தஞ்சாவூரை சேர்ந்த கவியரசன் என்பவனை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சூலூர் காவல்துறைக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் கவியரசனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.