Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உங்க கார் ஏன் இங்க நிக்குது….? அதிர்ச்சியடைந்த ரியல் எஸ்டேட் அதிபர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் பணம் மற்றும் நகை போன்றவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடவள்ளி பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரான சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியநாயகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி தனது குடும்பத்துடன் சுந்தரம் வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான தேவகோட்டைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சிங்காநல்லூர் காவல்துறையினர் சுந்தரத்தை தொடர்பு கொண்டு அவரது கார் கோவை விமான நிலையத்திற்கு பின்புறம் நிற்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுந்தரம் தனது வீட்டிற்கு சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் தங்க நகை, 5 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன், லேப்டாப் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வடவள்ளி காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சுந்தரம் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் காவல் துறையினரிடம் மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் காரை விமான நிலையம் அருகே நிறுத்தி விட்டு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. அதோடு காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |