Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பிறந்தநாள் விழாவிற்கு போனோம்” அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

ஓய்வு பெற்ற அதிகாரியின் வீட்டில் தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள நங்கநல்லூர் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் தனது உறவினர் ஒருவரின் வீட்டு பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீதர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

இதனையடுத்து இரவு நேரத்தில் திரும்பி வந்த போது வீட்டின் இரும்பு கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து ஸ்ரீதர் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கிலோ வெள்ளி, 45 பவுன் தங்க நகை மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஸ்ரீதர் உடனடியாக பழவந்தாங்கல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |