கோவிலில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கோட்டகுப்பம் பகுதியில் புகழ்பெற்ற சுதந்திர மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சங்கரநாராயணன் என்பவர் பூசாரியாக இருக்கின்றார். இந்நிலையில் காலையில் கோவிலுக்கு சென்ற சங்கரநாராயணன் கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த 1 1/2 அடி உயர வெள்ளி வேல், சந்தன கிண்ணம், பன்னீர் சொம்பு மற்றும் காணிக்கை பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சங்கரநாராயணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவிலில் கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.