முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பாகலூர் சாலையில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு இன்று காலை அலுவலகத்துக்குள் நுழைந்த கும்பல் ஒன்று நிறுவன மேலாளர் உட்பட நான்கு பேரை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர். இதையடுத்து ரூ.7கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்து விட்டு சென்றுள்ளனர். பின்னர் இதுகுறித்து நிறுவன மேலாளர் ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிசிடிவியில் பதிவான மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் மற்றும் கைரேகைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டப்பகலில் பைனான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.