Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட அலாரம் சத்தம்…. ஏ.டி.எம் மையத்தில் நடந்த சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஏ.டி.எம் மையத்தில் திருட முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செண்பகராமன்புதூர் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த வங்கியில் மேலாளராக குட்லின் ராய் என்பவர் வேலை பார்த்து வருகின்றார். இதற்கு அருகிலேயே வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஏ.டி.எம் மையத்திலிருந்து அலாரம் சத்தம் ஒலித்ததால் வங்கி மேலாளர் உடனடியாக அங்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை குட்லின் ராய் ஆய்வு செய்துள்ளார்.

அப்போது ஏ.டி.எம் மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் எந்திரத்தின் பட்டனை அழுத்தியதும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடும் காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் வங்கி மேலாளர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஏ.டி.எம் மையத்தில் திருட முயற்சி செய்த நபர் கண்ணன்புதூர் பகுதியில் வசிக்கும் அரவிந்த் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |