Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அதான் இப்படி பண்ணிட்டேன்” அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள்… விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த 10ஆம் தேதி வேலை முடித்து விட்டு வங்கியை பூட்டி சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலை வந்து பார்த்த போது வங்கியின் பக்கவாட்டு ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உடனடியாக உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது காசாளர் அறை மற்றும் லாக்கரை உடைத்து மர்ம நபர் கொள்ளையடிக்க முயற்சி செய்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக வெரைட்டி ஹால் ரோடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி வங்கிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அமிஸ் பிஸ்வாஸ் என்ற வாலிபர் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்தபோது, அமிஸ் வங்கி அருகே இருக்கும் ஒரு கட்டிடத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும், ஊரடங்கு நேரத்தில் ஏற்படும் பண தட்டுப்பாட்டை சமாளிக்க வங்கியில் கொள்ளை அடிக்க முயற்சி செய்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் லாக்கரை உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து சென்றதாக அந்த வாலிபர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |