Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தப்பித்த 4 லட்ச ரூபாய்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

லாக்கரை உடைக்க முடியாததால் மதுபான கடையில் இருந்த 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் மர்ம நபர்களிடம் இருந்து தப்பித்து விட்டது.

திருச்சி மாவட்டத்திலுள்ள தண்டலை புத்தூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த கடையில் ஆறுமுகம் என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மது விற்பனை செய்த 4 லட்சத்து 20 ஆயிரத்து 340 ரூபாய் பணத்தை கடையில் இருக்கும் லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு ஆறுமுகம் சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலை சென்று பார்த்த போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு ஆறுமுகம் அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த பணம் மற்றும் மது பாட்டில்கள் ஆகியவை அப்படியே இருந்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் லாக்கரை உடைக்க முடியாததால் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் அலாரம் ஆகியவற்றை எடுத்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |