கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வேப்பங்குடி கிராமத்தில் வசந்தகுமார் என்ற விவசாயி வசித்துவருகிறார். இவர் அங்குள்ள ஆற்று பாலத்தின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரில் வசித்து வரும் முருகேசன் என்பவர் அங்கு வந்துள்ளார். இதனையடுத்து முருகேசன் திடீரென கத்தியை காட்டி மிரட்டி வசந்தகுமாரிடமிருந்த நூறு ரூபாயை பறித்து சென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பூதலூர் காவல் நிலையத்தில் வசந்தகுமார் புகார் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பணத்தைப் பறித்துச் சென்ற முருகேசன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.