Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கரெக்டா கண்டுபிடிச்சிட்டாங்க…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்… 2 மணி நேரத்திலேயே தீர்வு…!!

நகை மற்றும் செல்போன் திருடிய நபரை புகாரளித்த 2 மணி நேரத்திலேயே போலீசார் கைது செய்து அவற்றை பறிமுதல் செய்து விட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பம்மலில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி புதூரில் உள்ள ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தனியார் மண்டபத்தின் மாடியில் நகைகளை வைத்து பூட்டிவிட்டு கீழே சென்று திருமண வேலைகளை பார்த்து வந்துள்ளார். அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து விஜயகுமார் உள்ளே சென்று பார்த்தபோது அவர் வைத்திருந்த 7 1/2 பவுண் நகைகள் மற்றும் 2 செல்போன்கள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மாங்காடு காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்தார்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தேகத்திற்கிடமான ஒரு நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் பொழிச்சலூர் பகுதியில் வசித்து வரும் பன்னீர்செல்வம் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அதோடு அவர் திருமண மண்டபத்தில் நகை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். அதன் பின் அவரிடமிருந்த 7 1/2 பவுன் நகைகள் மற்றும் 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். காவல் நிலையத்தில் புகாரளித்த 2 மணி நேரத்திலேயே குற்றவாளியை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |