Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எல்லா பக்கமும் சேதம்… ஆய்வு செய்த அதிகாரிகள்… வசமாக சிக்கியவர்கள்…!!

டாக்டர் வீட்டில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்னபகண்டை விநாயகர் கோவில் தெருவில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் டாக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மருத்துவமனை புதுவை அரியாங்குப்பத்தில் குப்பத்தில் உள்ளது. இவர் தற்போது அரியாங்குப்பத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான சின்னபகண்டையில் உள்ள வீட்டில் முன்பக்க மற்றும் பின்பக்க கதவுகளை உடைத்து மர்ம நபர்கள் அவரது வீட்டில் இருந்த நகை, பணம் மற்றும் வெண்கல பாத்திரம் போன்றவற்றை திருடி விட்டு சென்றுள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் டாக்டர் முத்துக்குமாருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனை அடுத்து சொந்த ஊருக்கு விரைந்து வந்த முத்துக்குமார் இச்சம்பவம் குறித்து பண்ருட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மோப்ப நாய் பிரிவு மற்றும் விரல் கைரேகைப் பரிவு, அதிகாரிகள் வந்து அங்குள்ள தடயங்களை சேகரித்தனர். மேலும் அவரது வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பண்ருட்டி பகுதியில் வசித்து வரும் முகிலன் என்பவரையும், ஜெய்கணேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |