Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஐயோ என் ஆட்டை காணும்… உடனே வித்துடுறாங்க… கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமம்தான்…!!

இரண்டரை இலட்சம் மதிப்புள்ள செம்மறி ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்திலுள்ள உடையாபட்டி பகுதியில் அருள்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாடுகள் மற்றும் 30 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இவர் தனது முப்பது ஆடுகளையும் தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் தனது வயலில் நடைபெற்ற அறுவடை பணிகளில் ஈடுபட்ட அருள்ராஜ், பணியை முடித்துவிட்டு ஆடுகளை திறந்து விடுவதற்காக அங்கு சென்றபோது, 7 குட்டிகள் மட்டுமே இருந்துள்ளன. அங்கு இருந்த 23 செம்மறி ஆடுகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் அருள்ராஜ் அறுவடைப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்ததால் மர்ம நபர்கள் பட்டியில் இருந்து 23 ஆடுகளையும் திருடி சென்றது அவருக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள் அவற்றை உடனடியாக விற்று விடுவதால் அதனை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகின்றது. மேலும் திருடு போன அந்த ஆடுகளின் மதிப்பானது 2  1/2 லட்சம் ரூபாயாகும்.

Categories

Tech |