பெட்ரோல் பங்க்கில் இருந்த பணப்பையை திருடி சென்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டியில் இருக்கும் பெட்ரோல் பங்க்கிற்கு 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட சென்றுள்ளனர். அந்த பெட்ரோல் பங்கில் சுந்தர்ராஜன் என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த வாலிபர்கள் அவரிடம் நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தபோது, நைசாக அவர் வைத்திருந்த பணப்பையை திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனால் சுந்தர்ராஜன் திருடன் திருடன் என சத்தம் போட்டதால், பொதுமக்கள் மற்றும் சக ஊழியர்கள் அந்த இரண்டு வாலிபர்களையும் மடக்கி பிடித்து விட்டனர்.
இதனையடுத்து அவர்கள் திருடிய பெட்ரோல் விற்பனை செய்த பணம் 7 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு, அந்த 2 பேரையும் காரியாபட்டி நிலையத்தில் அவர்கள் ஒப்படைத்து விட்டனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர்கள் ரோசல்பட்டி பகுதியில் வசித்து வரும் வெற்றிவேல் என்பதும் மற்றொருவர் அழகர் என்கிற பெரியசாமி என்பதும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.