Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இன்னும் நீ திருந்தலையா… இப்படியும் ஒரு பெண்ணா… மடிக்கி பிடித்த போலீசார்… சேலத்தில் பரபரப்பு…!!

25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை திருடிவிட்டு தப்பி ஓட முயற்சித்த பெண்ணை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள கோரிமேடு பகுதியில் பார்வதி என்பவர் வசித்துவருகிறார். இவருடைய இரண்டு மகள்களும் வெளியூரில் வேலை பார்த்து வருவதால் பார்வதி தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் வைத்திருந்த 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசாருக்கு அதே பகுதியில் வசித்து வரும் மைதிலி என்பவர் மீது சந்தேகம் வந்துள்ளது. அப்போது மைதிலி நகை மற்றும் பணத்துடன் தப்பி ஓட முயற்சித்த போது, போலீசார் அவரை சுற்றி வளைத்து விட்டனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பார்வதி வீட்டில் மைதிலி திருடியது போலீசாருக்கு உறுதியாகிவிட்டது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, மைதிலி மீது ஏராளமான திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்குகளை முடிப்பதற்கு அவருக்கு பணம் தேவைப்படுவதால் தனியாக வசித்து வந்த பார்வதியின் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த 25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை திருடி வெளியூருக்கு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளார் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் நகைகளை திருடிய குற்றத்திற்காக மைதிலியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |