Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அம்மனையும் விட்டு வைக்கல… நடந்த அதிர்ச்சி சம்பவம்… வலை வீசி தேடும் போலீசார்…!!

அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியை மர்ம நபர் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புள்ளலூர் பகுதியில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கோவிலில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பூசாரிக்கு பக்தர்கள் உடனடியாக தகவல் தெரிவித்து விட்டனர்.

இதனையடுத்து அங்கு விரைந்து வந்த பூசாரி கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது அவருக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பொசம்பள்ளி காவல் நிலையத்தில் பூசாரி புகார் அளித்தார். அத  புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |