Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இப்படியா பண்ணுவீங்க…. கடை உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசாரின் தீவிர விசாரணை….!!

கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மன்னாரை பகுதியில் வசித்து வரும் சேகர் என்பவர் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சேகர் கடைக்கு வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது கடையின் பிளைவுட் கதவின் பூட்டை கடப்பாரையால் மர்ம நபர்கள் உடைத்து கடையில் வைக்கப்பட்டிருந்த ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் மற்றும் 2500 ரூபாயை கொள்ளையடித்து விட்டு சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சேகர் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |