வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் காமராஜ் தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு காமராஜ் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் 500 கிராம் வெள்ளி பொருட்கள் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை அறிந்து காமராஜ் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து காமராஜ் திருநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.