தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திரு.வி.க தெருவில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை துறைமுகத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் கீழ்தளத்தில் வந்து தூங்கி உள்ளார். இந்நிலையில் இவர் காலையில் எழுந்து பார்த்தபோது, அவரது வீட்டு மாடியின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் பணம் மற்றும் 40 பவுன் நகை போன்றவை திருடப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து கோபாலகிருஷ்ணன் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரது வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.