Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மும்பைக்கு சென்ற குடும்பத்தினர்…. புதுமுறையில் அரங்கேறிய சம்பவம்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

வீட்டின் பீரோவை கள்ள சாவியை பயன்படுத்தி திறந்து அங்கிருந்த 9 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அணிலாடி கிராமத்தில் தேவசகாயம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜான்சன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் வீடுகளுக்கு ஜன்னல், கதவு, கேட் போன்றவை புதிதாக செய்து கொடுக்கும் நிறுவனத்தை மும்பையில் நடத்தி வந்துள்ளார். எனவே ஜான்சனுக்கு உதவும் வண்ணம் தேவசகாயம் தனது மனைவி கணிக்கைமேரியுடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி மும்பை புறப்பட்டு சென்றார். இந்நிலையில் தேவசகாயத்தின் வீட்டின் கதவு பூட்டிய நிலையில் அடிப்பகுதி மட்டும் வெட்டி எடுக்கப்பட்டதை கண்ட அவரது உறவினர் வனத்தையன் அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து இதுபற்றி ஜான்சனுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் விமானம் மூலமாக தேவன்சகாயத்தின் குடும்பத்தினர் சொந்த ஊருக்கு விரைந்து வந்தனர். அப்போது அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் கள்ளசாவியை பயன்படுத்தி மர்ம நபர்கள் திறந்து அங்கிருந்த 1 லட்சத்து 5 ஆயிரத்து 500 பணத்தையும் 20 பவுன் நகையும் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. அதோடு அவர்கள் வீட்டில் வைத்திருந்த 30 கிலோ பித்தளை விளக்குகள், 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

அதன்பின் தேவசகாயம் பெரியதச்சூர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சோதனையிட்டதில் மர்மநபர்கள் மரம் அறுக்கும் எந்திரத்தால் கதவின் அடி பகுதியை மட்டும் வெட்டி எடுத்து உள்ளே நுழைந்தது தெரியவந்துள்ளது. அதோடு மர்ம நபர்கள் திருடிச் சென்ற அந்த மொத்த பொருட்களின் மதிப்பானது ரூபாய் 50 லட்சம் மேல் இருக்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |