ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் திருடிய மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள பெருங்குடியை அடுத்த வளையப்பட்டியில் ஆடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் செல்வம், விஜய், முத்துராமன் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுவனத்திலிருந்து ரூபாய் 30 ஆயிரம் மதிப்பிலான மூலப்பொருள்களை மூவரும் திருடியது தெரியவந்தது.
இந்நிலையில் ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளரான ராகவன் பெருங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் பெருங்குடி காவல்துறையினர் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.