Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

20 கிலோ மீட்டர் தூக்கி சென்று…. நெடுஞ்சாலையில் வீசப்பட்ட எந்திரம்…. திருப்பூரில் பரபரப்பு…!!

ஏ.டி.எம் எந்திரத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் 1 லட்சத்து 100 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு அதனை நெடுஞ்சாலையில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் பாங்க் ஆஃப் பரோடா வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்தில் உள்ள எந்திரத்தை முகமூடி கொள்ளையர்கள் பெயர்த்து காரில் கடத்தி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடத்தி செல்லப்பட்ட அந்த ஏ.டி.எம் இயந்திரமானது ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளியம்பாளையம் பிரிவில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஏ.டி.எம் எந்திரத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் ஏ.டி.எம் எந்திரத்தை கடத்தி சென்ற மர்ம நபர்கள் 20 கிலோமீட்டர் தொலைவில் அதனைக் கொண்டு சென்று உடைத்து அதிலிருந்த 1 லட்சத்து 100 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சாலையில் வீசி சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |