Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யாரு இந்த வேலைய பண்ணிருப்பா… அதிர்ச்சி அடைந்த பூசாரி… CCTV கேமராவில் பதிவான காட்சிகள்…!!

கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி ஜூப்ளி கிணறு வீதியில் சித்திவிநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து சுவாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பூசாரி மட்டும் கோவிலை திறந்து வைத்து பூஜை செய்து வருகின்றார்கள். இதனை அடுத்து அந்த கோவிலுக்கு பூஜை செய்ய சென்ற போது ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து பூசாரி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டிருந்ததை  அறிந்துள்ளார்.

இதுகுறித்து உடனடியாக பொள்ளாச்சி மேற்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற காட்சி அந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற அந்த மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |