விவசாயியின் வீட்டில் மர்ம நபர்கள் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமர் தோட்டம் பகுதியில் ஸ்ரீனிவாசன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் காந்திபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் ஸ்ரீனிவாசன் தனது வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஸ்ரீனிவாசன் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.