Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமே இல்ல…. மர்ம நபரின் கைவரிசை…. வலை வீசி தேடும் போலீசார்…!!

வீட்டிற்குள் ஆள் இருந்த போதே மர்ம நபர் 15 பவுன் தங்க நகை மற்றும் இரண்டு செல்போனை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீராபுரம் பொள்ளாச்சி அம்மன் நகரில் ஞான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் இரண்டு செல்போன் மற்றும் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை திருடி உள்ளார்.

இதனையடுத்து அந்த மர்ம நபர் ஞான கணேசன் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்ற போது அவர் எழுந்து திருடன் வந்ததை அறிந்து கூச்சலிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த மர்ம நபர் வீட்டில் இருந்தவர்களிடம் சிக்காமல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |