மர்ம நபர்கள் ஊராட்சி ஒன்றிய தலைவர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சுந்தர விஜயன் என்ற ஊராட்சி மன்ற தலைவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்தாலை கிராமத்தில் சொந்தமாக வீடு உள்ளது. தற்போது விஜயன் தனது குடும்பத்தினருடன் திருமங்கலத்தில் வசித்து வருகின்றார். இந்நிலையில் மர்ம நபர்கள் விஜயனின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே இருந்த டிவி மற்றும் விலை உயர்ந்த மின்சாதன பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து சுந்தர விஜயன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருமங்கலம் காவல் துறையினர் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.