கடைக்காரரின் கவனத்தை திசை திருப்பிய மர்ம நபர்கள் 30 பவுன் மதிப்பிலான 5 தங்க சங்கிலிகளை நைசாக திருடியுள்ளனர் .
சென்னை மாவட்டதில் பல்லாவரம் பகுதியில் கமலேஷ் என்பவர் வசித்து வருகிறார். 37 வயதான இவர் அதே பகுதியில் நகைக்கடை வைத்திருக்கிறார். இவரது கடைக்கு வாடிக்கையாளர்கள் போல் வந்த மர்ம நபர்கள் தாங்கள் சொந்த ஊருக்கு செல்வதாகவும், தங்களிடம் இருக்கும் பெரிய தொகையை வைத்து தங்க சங்கிலிகளை வாங்க வந்திருப்பதாகவும் கூறியுள்ளனர். அவர்கள் கூறியதை நம்பிய கமலேஷ் தன்னிடம் தங்கச்சங்கிலி இல்லாததால் பல்லாவரத்தில் உள்ள தனது உறவினர் கடையிலிருந்து தங்கச்சங்கிலியை கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் மர்மநபர்கள் காமலேஷின் கவனத்தை திசை திருப்பி 30 பவுன் மதிப்பிலான 5 தங்க சங்கிலிகளை நைசாக திருடி உள்ளனர். இதனையடுத்து தங்க நகைகள் காணாமல் போயிருப்பதை கண்டு கமலேஷ் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கமலேஷ் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர.