வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் பார்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து பார்வதி அதிர்ச்சி அடைந்தார்.
அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 25 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் பார்வதி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.