Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அந்த இடத்தை கூட விட்டு வைக்க மாட்டீங்களா… வசமாக சிக்கியவர்கள்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு காவல்துறையினருக்கு முத்தாரம்மன் கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன், நாகம்மன் கோவிலில் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்மநபர்கள் உண்டியலை உடைப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கோவிலுக்குள் புகுந்து மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். இதனையடுத்து அந்த மர்ம நபர்களை மடக்கி பிடித்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டத்தில் உள்ள தாதனூத்து கிராமத்தில் வசித்து வரும் முத்துராஜ், முருகன், பால் துரை என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் 3 பேர் மீதும் பல காவல் நிலையங்களில் ஏற்கனவே திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கயத்தாறு காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் 2000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |