வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் வேதரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வேதரத்தினம் வேலைக்கு புறப்பட்டு சென்ற பிறகு அவரது மனைவி மோகனா வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் ரூ 1,500 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் வேதரத்தினம் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.