Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

வியாபாரியின் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூரில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டு மளிகை பொருட்களை ஏஜென்சி எடுத்து கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார் இந்நிலையில் சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அதன்பிறகு பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும் 96 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி விட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனையடுத்து காலையில் எழுந்து பார்த்த சுரேஷ் நகை மற்றும் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |