Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற குடும்பத்தினர்… உறவினர் தெரிவித்த அதிர்ச்சி தகவல்… CCTV கேமராவால் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

பிரின்டிங் பிரஸ் நிறுவனர் வீட்டில் 120 பவுன் நகை மற்றும் 25 லட்ச ரூபாய் ரொக்கம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் சபியுல்லா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சொந்தமாக பிரிண்டிங் நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். மேலும் இவர் தமிழ்நாடு மாநில அமைப்பு கபடி கழக பொதுச் செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில் சபியுல்லா ஊட்டிக்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். இதனையடுத்து சபியுல்லாவின் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்த அவரது உறவினர் ஷியதுல்லா அதிர்ச்சி அடைந்து சபியுல்லாவிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பின் வீட்டிற்கு விரைந்து வந்த சபியுல்லா உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு இரண்டு பீரோவில் இருந்த 120 பவுன் தங்க நகை மற்றும் 25 லட்ச ரூபாய் பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர். இதனையடுத்து கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர்.

அப்போது சபியுல்லா வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்த போது ஹெல்மெட் அணிந்த இரண்டு மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் வந்து சபியுல்லாவின் வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து உள்ளே நுழைந்து நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு தப்பி சென்றது அதில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையடித்துச் சென்ற 2 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |