Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த போது…. அத்துமீறி நுழைந்த மர்ம நபர்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்து செல்போன் மற்றும் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் உலகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது அண்ணன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த உறவினர்கள் உலகநாதனின் வீட்டு மேல் மற்றும் தரை தளத்திலும் தங்கியிருந்தனர்.இதனையடுத்து மாடியின் வழியாக மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து உறவினர்களின் செல்போன் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை திருடியுள்ளார்.

அப்போது தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் எழுந்து பார்த்தபோது மர்ம நபர் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார். இதனை அடுத்து அந்த மர்ம நபர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து உலகநாதன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினரின் மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |