நண்பன் வீட்டில் பணம் திருடியதாக கூறி சக நண்பர்களே ஒருவரை கொடூரமாக தாக்கிய வீடியோவை வெளியிட்டதால் அந்த இளைஞன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகே அம்மாபேட்டை சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகன் ராகுல், அதேபோல் பக்கத்து ஊரான கோனூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் இருவரும் நண்பர்களாவார்கள். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி லட்சுமணன் வீட்டில் இருந்த 30 ஆயிரம் ரூபாயை காணவில்லை என்றும், அதனை ராகுல் தான் எடுத்து இருக்கலாம் என கருதி அவரை அழைத்து சென்ற நண்பர்கள் அவரின் கண்களை கட்டி கம்பால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
அப்போது அவர் தான் எடுக்கவில்லை என்றும், தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சி உள்ளார். இந்த காட்சிகளை நண்பர் வீடியோவாக எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த காட்சியை பார்த்த ராகுல் திருட்டுப் பட்டம் கட்டி தன்னை அடித்த வீடியோ வை கண்டு நேற்று எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார் .வீட்டில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் இந்த வீடியோவை பார்த்த அம்மாபேட்டை போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராகுலிடம் புகாரினை பெற்று லட்சுமணன் நண்பர்களான கோனுரை சேர்ந்த விக்கி, விவேக், பார்த்திபன், ஐயப்பன், லட்சுமணன் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அடிவாங்கிய இளைஞர் ராகுல் ,லட்சுமணன் மற்றும் அவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த மணல் அள்ளும் கூலி வேலை பார்ப்பது தெரியவந்துள்ளது.