Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இரவில் கேட்ட சத்தம்… பார்க்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

விவசாயியே உருட்டு கட்டையால் தாக்கி நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபுலியூர் கிராமத்தில் கஜேந்திரன் என்ற விவசாயி வசித்துவருகிறார். இவருக்கு நள்ளிரவில் தனது வீட்டின் பின்பக்க கதவை உடைக்கும் சத்தம் கேட்டது. இந்த சத்தம் கேட்டு எழுந்த கஜேந்திரனை மர்மநபர்கள் உருட்டுக்கட்டையால் தலையில் பலமாக தாக்கினர். அதன்பின்னர் அவரது மனைவி லட்சுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். மேலும் அவரது வீட்டில் இருந்த ரூபாய் 15,000-ஐ மர்மநபர்கள் திருடிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாகவே கஜேந்திரனின் வீட்டிற்கு அருகே உள்ள வாசு என்பவரின் வீட்டில் மர்ம நபர்கள் கடப்பாரை கொண்டு கதவை உடைத்தது தெரியவந்துள்ளது. ஆனால் அந்த வீட்டின் உள் தாழ்ப்பாள் பூட்டை மர்மநபர்களால் உடைக்க முடியாததால் அவர்களது திருட்டு முயற்சியை கைவிட்டு கஜேந்திரனின் வீட்டிற்கு வந்துள்ளனர். இதனையடுத்து தலையில் பலத்த காயமடைந்த கஜேந்திரன் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிந்து வீட்டில் கொள்ளையடித்த அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |