கோவில் உண்டியலை மர்ம நபர் தூக்கி செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் வீரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சென்ற பூசாரி உண்டியல் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பூசாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்மநபர் கோவில் உண்டியலை தனியாக தூக்கி செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் அந்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.