Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளிய அப்படியே தான் இருக்கு… மர்ம நபர்களின் செயல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

டாஸ்மாக் கடையின் மேற்கூரையில் துளையிட்டு மர்ம நபர்கள் மது பாட்டில்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுபான கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விமான நிலையம் அருகில் இருக்கும் ஒரு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு போனதாக பீளமேடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது கடையின் ஷட்டர் மற்றும் பூட்டு எதுவும் உடைக்கப்படாமல் இருந்துள்ளது.

அதன்பின் கடைக்கு உள்ளே சென்று பார்த்த போது, மர்ம நபர்கள் கடையின் மேற்கூரையில் கட்டிங் எந்திரம் மூலம் துளையிட்டு உள்ளே புகுந்தது தெரியவந்துள்ளது. மேலும் அந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2057 மது பாட்டில்களை திருடி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |