Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கேமராவை திருப்பி வச்சிட்டாங்க… மொத்தம் 5 லட்ச ரூபாய் மதிப்பு… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பார் உரிமையாளர் டாஸ்மாக் கடையில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை மாவட்டத்தில் உள்ள நொளம்பூரில் இருக்கும் அரசு டாஸ்மாக் கடை  முழு ஊரடங்கு காரணமாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடையின் பூட்டை திறந்து சிலர் மது பாட்டில்களை எடுத்து செல்வதாக அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி டாஸ்மாக் மேலாளர் சுமதி அங்கு விரைந்து சென்று டாஸ்மாக் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.

இந்நிலையில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிசிடிவி கேமராவை திருப்பி விட்டு 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து எழும்பூர் காவல்நிலையத்தில் டாஸ்மாக் கடை மேலாளர் சுமதி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பார் உரிமையாளரான ராஜா என்பவர் மதுபாட்டில்களை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ராஜாவை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |